இன்றைய நாளில் முக்கியத்துவம் நிறைந்த ஒரு உரையாடலை பாக்கலாம். வாழ்க்கை என்பது வெல்ல வேண்டியது என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் ஆளுமை மிக்கவர்களே வெற்றியாளராக கருதப்படுகிறார்கள். அத்தகைய பண்பே வெற்றியாளர்க்கான அடையாளமாக இருக்கிறது. அப்படி ஒருவர் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு தரும் பதிலை கவனியுங்கள்!!!!!!!!!!!!!???????????
“உங்களுடைய வெற்றிக்கான காரணம் என்ன?”
வெற்றிகரமான ஒரு நிறுவனத் தலைவரிடம்
பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார்.
“சரியான முடிவுகள்! சரியான முடிவுகளை எடுப்பதால்
தான் நான் வெற்றியடைந்திருக்கிறேன்.” அவர் பதில் சொன்னார்.
“சரி, எப்படி உங்களுக்குச் சரியான முடிவுகளை
எடுக்கும் திறமை கிடைத்தது?”
“அனுபவம்! அனுபவமே எனக்குச் சரியான முடிவுகளை
எடுக்க கற்றுத்தருகிறது.”
“அது சரி... அனுபவத்தை எப்படி
பெற்றுக்கொண்டீர்கள்?”
சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் அவர். “தவறான
முடிவுகளை எடுப்பதனால் அனுபவம் கிடைக்கிறது.”
அந்த வெற்றியாளர் யார் என்று கேட்கிறீர்களா?
0 comments :
Post a Comment