விமர்சகம்-விமர்சகர்கள் : இரு
முகங்கள், இரு
வழிகள், இரு
வேறு விதமான
பார்வைகள். ஒரு முகம் இனியது; இனிய
வார்த்தைகளை பயன்படுத்துவது; மற்றொன்று கடுமை; எதையும்
எவரையும் கருணைக்
கண் கொண்டு கண்டறியாதது. எனினும்
இவ்விரு பார்வைகளின்
நோக்கம் ஒன்றானது.
ஒருநிலையை கொண்டிருக்க
வேண்டியது: நடுவு நிலைமை.
நடுநிலை இல்லாத விமர்சகமோ,
விமர்சகனோ நெடுநாள்
நிலைக்க முடியாது
போகும். இந்த
நடுநிலை இல்லாத
விமர்சகனின் முடிவுகள் சரியானவை என்று ஏற்க
இயலாதது. ஒரு
நடுநிலையானனின் முடிவுகள் என்றும் மதிப்புடன் நிலைக்கின்றன.
அவனது பார்வை
தனிச்சிறப்பு பெறுகிறது.
ஒரு விமர்சகனின் நடுநிலை
அவனது தீர்ப்புகளால்
நிர்ணயிக்கப்படுகிறது. அவனது பார்வை
தீர்ப்புகளை வழங்குகிறது. பார்வைகள் மாறும்போது தீர்ப்புகளும்
மாறும். பார்வைகளில்
பொதிந்துள்ள நோக்கம் அதன் தரத்தை அளவிட
உதவும்.
ஒருவனின் நோக்கம் அவனது
பார்வையை நிர்ணயிப்பதுடன்
அவனது முடிவுகளையும்
நிர்ணயிக்கிறது. எனவே ஒருவனது நோக்கங்கள் சுயநலமின்றி,
சுய விருப்பு / வெறுப்பு சம்பந்தப்பட்ட முடிவாக அல்லாமல் இருக்க
வேண்டிய நிலை
உருவாகிறது. முக்கியமாக ஒரு விமர்சகன் கண்டிப்பாக
ஒரு ரசிகனாக
இருக்கக்கூடாது. அப்படி அவன் ரசிகனாக இருக்கும்பொருட்டு
அவன் விமர்சகனாக
முடியாது.
ஏனெனில் ஒரு ரசிகனின்
பார்வை என்றும்
அவனது ரசிகத்துவத்தை
மையப்படுத்தியே அமைகிறது. மேலும் ஒரு ரசிகனின்
பார்வை என்றும்
சுய விருப்பமானதே.
அவன் விமர்சகன்
எனும் தகுதி
பெறுவது இயலாதது.
ஒரு விமர்சகனாக விரும்புவன்
தனக்குள் உள்ள
ரசிகன் என்பவனை
தொலைக்க வேண்டியது
இன்றியமையாதது. ரசிகனாக இருக்க விரும்புவன் விமர்சகன்
எனும் தகுதியை
நினைக்கக்கூடாது.
0 comments :
Post a Comment