போதை: என்று, எப்பொழுது என்று வரையறுக்க முடியா அளவு மனிதனுடன் கலந்து விட்ட ஒரு பழக்கம்; அதன் உருவங்கள் மாற்றம் பெற்றாலும் அதன் குணம் மாறாது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
போதையின் குணமானது ஒன்றே; அது அளவிட முடியாத, கட்டுப்பாடற்ற, திசை பிறழாத ஒரு உந்துதல். அதன் வடிவங்களோ எண்ணற்றவை.
இன்று போதையின் வடிவமானது ஒரு சிறு சந்தோசம் தரக்கூடிய, ஒரு இட்சையை தீர்க்க கூடியதாய் உருமாற்றம் பெற்றுள்ளது. பெண்ணும், மண்ணும், பொன்னும் போதைகள் என்று பெருவாரியாக சொல்லப்பட்டாலும், இவைத் தவிர்த்த மதுவே இன்று மிகப்பெரிய போதை.
இன்று மது இல்லாத இடத்தைத் தேடித்தான் கண்டுகொள்ள வேண்டும். அந்த அளவு மதுவானது இவ்வுலகை போதை கொள்ளச் செய்திருக்கிறது. 'மது அருந்தாதவன் மடையன்' என்று கேலி செய்யும் நிலையே இன்று அதிகம். இதைவிட மதுவின் தாக்கத்திற்க்கு சான்று வேறு தேவை இல்லை.
போதையின் உண்மை குணம் அறியாதவர்களே மதுவை போதையாகக் கொள்வர்.
போதையின் உண்மை சொருபமானது அளவில்லா வேட்கை: எத்தகைய தடைகளையும் உடைத்தெறியும் சக்தி. இதை உணர்ந்தவர்கள் மதுவையோ அல்ல இன்னும் பிற மனித இட்சைகளையோ போதை என சொலர்.
மாவீரர்களின் போதையானது வெற்றி; மேதைகளின் போதையானது கல்வி; பேரரசர்களின் போதையானது புகழ். இத்தகைய போதைகள் மனிதனை மாமனிதனாக்கும் குணம் கொண்டவை. அவனை உலகம் மறவா அமரனாக்கும் சக்தி கொண்டவை. எத்தடைகளையும் உடைத்தெறியும் ஆற்றல் படைத்தவை.
அத்தகைய போதையை இட்சையாக மாற்றியது இச்சமுதாயமும் அதன் மாமக்களும். இன்று போதையை எதிர்க்கும் ஒருவரும் அதன் உண்மை குணத்தை அறியாதவர்களாக இருப்பது மனித சமுதாயத்தின் விசித்திரம்.
மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் முதலில் போதையின் குணத்தை அறிவதுடன் அதை மற்றவருக்கு போதிப்பதும் இன்றியமையாதது. நமது பாடத்திட்டங்களும் இட்சைகளையே போதைகளாக போதிக்கின்றன. இது தான் இத்தவறுகளின் தொடக்கம். நீங்கள் வெற்றியையும், கல்வியையும், புகழையும் போதைகளாக போதித்தால் மது என்பது இட்சையாக்கப்படும், அதன்மேல் போர்த்தப்படும் பட்டுத்துணிகள் கிழிக்கப்படும்; மது குறையும், படிப்படியாக ஒழிக்கப்படும். அதுவரை மதுவும், மாதுவும், செல்வமும் விஷ்வரூபம் குறையாது வளர்ந்து கொண்டுதான் இருக்கும், நீங்கள் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும்.
Claps
ReplyDelete