வாக்காளர்
பட்டியலில் ஆதார் எண்ணைச் சேர்ப்பதன் வாயிலாக போலி வாக்காளர்களின் எண்ணிக்கையைக்
குறைக்க முடியுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில்
மாநில தேர்தல் ஆணையத்துடனான அனைத்துக்கட்சி கூட்டத்தில் போலி வாக்களர்கள்
குறைப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் தேவைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதில் ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது, பிழையே இல்லாமல் வாக்காளர் பட்டியலில் முழுமையாக திருத்தம் மேற்கொள்வது, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்து இருந்தால் தானாக முன்வந்து அதை திருத்தம் செய்வது, வாக்காளர் பெயரில் உள்ள திருத்தங்களை சரி செய்வது, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை இணைப்பது பற்றி விவாதிக்கப்பட்ட பின்னர், இதற்கான ஒத்துழைப்பை அனைத்துக்கட்சிகளும்
வழங்க வேண்டுமெனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
வாக்காளர் பட்டியலிலும் ஆதார் எண் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில்
மாநில முன்னனி கட்சிகளுன் பிற கட்சிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment