பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும் மதிப்பெண்
சான்றிதழை தேர்வெழுதியவர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங் களில் நேரில்
சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குநர்
கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்
கூறியுள்ளார்.
கடந்த செப் டம்பர் 25 முதல்
அக்டோபர் 10-ம் தேதி வரை
பிளஸ்-2 துணைத்தேர்வுகள்
நடைப்பெற்றது. வரும் திங்கட்கிழமை முதல் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண்
சான்றிதழினை தேர்வெழுதிய மையங்களில் இருந்து பிற்பகல் 2 மணி முதல் பெற்றுக்
கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது என்றும் அரசு
தேர்வுகள் இயக்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக
அமைக்கப் பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை
மையங்களில் வருகிற 29, 30, 31-ம் தேதிகளில் நேரில்
சென்று உரிய கட்டனத்துடன்
அதாவது 50 ரூபாயைச் செலுத்தி ஆன்லைனில்
விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெற செலுத்த வேண்டிய கட்டணம்
பகுதி
1 மொழி பாடம் - ரூ.550,
பகுதி 2 ஆங்கிலம்
- ரூ.550,
மற்ற பாடங்கள் - ரூ.275
மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க செலுத்த வேண்டிய கட்டணம்
பகுதி 1 மொழி
தாள் (தமிழ்) – ரூ.305
பகுதி 2 மொழித்தாள்
(ஆங்கிலம்) - ரூ.305,
பிறப் பாடங்கள் - ரூ.205
விண்ணப்பித்த
பிறகு வழங் கப்படும் ஒப்புகைச்சீட்டில்
குறிப் பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் விடைத்தாள்
நகல்களை இணைய தளத்தில் பதிவிறக்கம்
செய்ய முடியும், மேலும், மறுகூட்டல் முடிவு
களையும் அறிய முடியும். எனவே,
ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க
வேண்டும் என்றும் அந்த
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment