அமெரிக்காவின்
குடியரசு தலைவராக அதிகமுறை தெரிவு செய்யப்பட்ட, 20ம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல்
தலைவர் 'அச்சம்
என்ற
உணர்வுக்குதான்
நாம்
அச்சப்பட
வேண்டும்'
என்று அதிபராக பதவியேற்ற விழாவில் சூளுரைத்தார்.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையினையும்
உலக நாடுகளினை அச்சுறுத்திய இரண்டாம் உலக போரிலும் நேரடியாக பங்காற்றிய இவர்
பிரெஞ்சு, ஜெர்மன் மொழி பேசியக்கூடியவர். மாசாசூசெட்ஸ் குரோடன் பள்ளியின் தலைமை
ஆசிரியரான எண்டிகோட் பீபாடி என்பவரை தன் முன்மாதிரியாக கொண்டு வளர்ந்தவர்
குதிரையேற்றம், போலோ, டென்னிஸ் மற்றும் கோல்ஃப் ஆகிய விளையாட்டினையும் கற்று
தேர்ந்தார்.
32வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பதவியேற்ற சில
நாட்களிலே பொருளாதார நெருக்கடியை மட்டுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை
மேற்கொண்டார். குறிப்பாக வங்கி சீர்திருத்தங்களை அறிவித்து மக்களுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்தினார். சாலை அமைப்பது, மரங்கள் நடும் திட்டம் மூலம் வேலை வாய்ப்புகளை
ஏற்படுத்தினார். இதன் வாயிலாக பொதுப் பணிகளை நிறைவேற்றினார்.
கேம்பபெல்லோ என்ற தீவிற்கு
விடுமுறையில் சென்ற
அவரை ‘ஃபோலியோ மைலிட்டிஸ்' எனப்படும் ஒருவகையான முடக்குவாதம் தாக்கியது. ஒரு மாத
காலம் வலியாலும் காய்ச்சலாலும் அவதிப்பட்ட அவருக்கு இடுப்புக்குக் கீழ்
உடல் செயலிழந்தது. அப்போது அவருக்கு வயது
முப்பத்தொன்பதுதான். உடலில்
பாதி செயலிழந்து போனாலும் அதனை ஒரு
தோல்வியாக கருதாமல் மனைவி
எலியனேர்
துணையுடன் போராடத் துணிந்தார். ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த
Warm Springs என்ற இடத்திலிருந்த சூடான
நீருற்று வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு குணமளிப்பதாக ஒரு நண்பர்
கூறவே அங்கு சென்றார். அந்த நீருற்றில் நீந்திய பிறகு கால்களில் வலிமை ஏற்படுவதாக உணர்ந்தார்.
முடக்குவாதம் வந்தபோது முடங்கி போயிருக்க வேண்டிய ஒருவர்
உலகின் ஆகப்பெரிய வல்லரசு நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் அதனை கம்பீரமாக வழிநடத்தியதால் வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதர் பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்.
0 comments :
Post a Comment