ஒரு ஆங்கில சொல்லுக்கு இணையாக எத்தனை தமிழ் சொற்கள்
இருக்க முடியும்? ஒன்று இரண்டல்ல, 47 சொற்கள் உள்ளன. ஆச்சர்யமாக உள்ளதா? தமிழ் மொழியின் வளம் இது.
ஃபோபியா எனும் ஆங்கில சொல்லுக்கு 47 இணையான தமிழ் சொற்கள்:
(1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம்
தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்தும்.
(2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும்
அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள்
அடையாளம் காட்டும்.
(3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படும்.
(4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.
பிரபல நாளிதழ் ஒன்றில் ஆங்கிலச் சொற்களுக்கு
இணையான நல்ல தமிழ் சொற்களைக் கொட்டு, சரியான விடை தருபவர்களுக்கு பரிசளிக்கும்
போட்டி ஒன்றை சென்னை
உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் அவர்கள் நடத்தி வந்தார். இது
வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில்
வெளிவந்தது.
ஃபோபியா எனும்
சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைக் கேட்டிருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம்,
பொன்னமராவதி அருகில் உள்ள பொன்.புதுப்பட்டியை சேர்ந்த திருமதி.தமிழ்ச்செல்வி என்பவர் தந்த பதில்,
47 சொற்கள்.
அசந்துபோன நீதியரசர் நீண்ட நாள் தேடி அலைந்து
தமிழ்ச்செல்வி அவர்களை நேரில் கண்டு வாழ்த்தியது மட்டுமின்றி, அவரது தமிழ் புலமையை
தான் செல்லும் மேடைகளில் எல்லாம் பேசி பெருமைப்படுவார்.
தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ள தமிழ்ச்செல்வி, ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தமிழ்ச் சொற்களின்
சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, அனைவரையும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
அருமை
ReplyDelete