மங்கள்யான்
செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டு வெற்றி பெற்றதை முன்னிட்டு மங்கள்யானின்
அமைப்பை கூகுள் தனது முகத்தளத்தில் வெளியிட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த நாளில் கூகுளில் டூடுள் வாயிலாக அதன் சிறப்பை அறியச் செய்கிறது.
அதேபோல் வியாழன்
இரவு வெளியிட்ட டூடுளில் மங்கள்யான் அமைப்பை பதிவேற்றம் செய்து இந்தியாவைப்
பெருமைபடுத்தியுள்ளது கூகுள். ஒரு மாதம் நிறையுற்றதை கருத்தில் கொண்டு கூகுள்
நிறுவனம் இச்செயலை செய்துள்ளது.
கூகுள் என்ற
வார்த்தையை மங்கள்யான் அமைப்போடு பொருத்திக் கொண்டதோடு சிவப்பு கிரகம் என்று
அழைக்கப்படும் செவ்வாயைப் பின்புறத்தில் காட்டியபடி அந்த நிழல் படம் உள்ளது.
மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருவது போல அந்த டூடுளில் காட்சிப்படுத்தப்
பட்டுள்ளது.
0 comments :
Post a Comment