வல்லமை மிக்க கவிஞர்களை அறிய வேண்டுமெனில் நம்முடைய வரலாற்றினை ஆராய்ந்து பார்ப்போமேயானால் ஏராளமானவரை அறியலாம். அதேபோல் மேற்கத்திய தேசங்களில் கூட மகா கவிஞர்கள் வாழ்ந்துள்ளனர்.

ஒரு மகா கவிஞன் தன்னுடைய மக்களுக்கு அரசியல் சார்ந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த கவிதைகளையே பயன்படுத்தினான். அதன் பயனாக மன்னராட்சி மரணிக்க வேண்டியதாயிற்று. பழமையில் ஊறிப்போன சமூகத்தினரை முன்னேற்ற மேடைக்கு இழுத்துவர முயன்று வென்றவர். கடந்த டிசம்பர் 9, 2008 ல் தனது 400வது பிறந்த தினத்தை கொண்டாடிய அவர், லண்டனில் உள்ள சீப்சைட்டில் பிறந்தார்.

1632 ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லாது வீட்டிலிருந்தபடி எண்ணற்ற புத்தகங்களையும் பைபிளையும் படித்து தன்னறிவை பலப்படுத்திக் கொண்டார். லத்தீன், எபிரேயம் மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமைப் பெற்றார். புலமையை வெளிப்படுத்திய மகா கவிஞன் இழந்த சொர்க்கத்தையும் மீண்ட சொர்க்கத்தையும் படைத்து வரலாற்றில் வாழ்கிறார். நவம்பர் 8 ல் இவ்வுலகை விட்டு நீங்கிய அந்த ஆத்மா ஒவ்வொரு இலக்கியவாதியின் இதயத்தில் ஒளியாகி வளர்கிறார்.

அவரின் எழுத்துக்கள் மக்களை கவ்விய போது, அவரது எழுத்துக்களை 'தீ' நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமல்ல, அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த 'ஜான் மில்டனின்' பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment