பாஜகயுடன் சிவசேனா கூட்டணி



மஹாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கடந்த வாரம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


பா.ஜ.க, காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட தேர்தலில் முடிவில் பாஜக 123 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இக்கட்சியே அதிகபட்ச வெற்றிகள் பெற்றுள்ளது. அடுத்து சிவசேனா 63 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே 42 மற்றும் 41 இடங்களில் வெற்றி பெற்றன. பிற கட்சிகள் மற்றும் சுயட்சைகள் உள்ளடங்க 19 பேர் வெற்றுள்ளனர்.

சட்டசபையை அமைக்க தனிப்பட்ட ஒரு கட்சி 145க்கும் மேற்பட்ட இடங்களை தன்வசமாக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணி கட்டிகள் ஆட்சி அமைக்க வேண்டும். அதன்படி அதிகபட்ச வெற்றிகள் பெற்ற அணி எந்த அணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் பாஜகவினால் கூட்டணி அமைக்க பிறக்கட்சிகளால் முடியாதமையால் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மூன்று தினங்களுக்கு மேலாகியும் இன்னும் யார் ஆட்சி செய்யப்போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது என சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சியின் மூத்த தலைவர்களான அனில் தேசாய், சுபாஷ் தேசாய் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள், பாஜக தலைவர்கள் தர்மேந்திர பிரதான், சந்திரகாந்த் பட்டீல் ஆகியோரை சந்தித்துப் பேசினர். அப்போது பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவசேனாவுக்கு அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அமைச்சர் பதவி வழங்கவும், துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை இரு கட்சிகளும் ஏற்றுக் கொண்டதாகவும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 25 ஆம் தேதி நடக்க உள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன் வந்தது. ஆனால் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment