“ இது எந்த ஒருகட்சிக்கும் தனிச்சிறப்பானது
அல்ல. தன்னை சுற்றியுள்ள சூழலை
சுத்தமாக வைத்துக்கொள்வது மகாத்மா காந்தியின் போதனை”
என்று டுவிட் செய்துள்ள
முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சசி தரூர் திருவனந்தபுரம் கடற்கரையைச்
சுத்தம் செய்தார்.
பிரதமர்
நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டை சுத்தப்படுத்தும் வகையில்
‘‘தூய்மை இந்தியா’’
எனும் புதிய திட்டத்தை அறிமுகம்
செய்தார். நாடெங்கும் உள்ள பல்வேறு துறை
பிரபலங்கள் இந்த திட்டத்தில் தங்களை
இணைத்துக் கொண்டு தெருக்களில் குப்பைகளை
அகற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மகாத்மா காந்தி
பிறந்த நாளில் மோடி தொடங்கிய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் சேரும்படி விடுத்த
அழைப்பை ஏற்றுக் கொண்ட சசி தரூர் அதை செயல்படுத்தும் விதத்தில் இன்று
திருவனந்தபுரம் விழிஞ்சம் கடற்கரைக்கு காலை 11 மணிக்கு வந்து அங்கு கிடக்கும்
குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பிரதமர்
நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில்
இணைந்ததற்காக சசி தரூர் மீது
தொடர்பாளர் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி நீக்கிய நிலையில் அவர் மீண்டும் இந்த
திட்டத்தில் பங்கேற்றுள்ளார். இது
குறித்தே அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்ச்சொன்னபடி குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment