ஹொல்மெட் அணியாதமையால் சர்ச்சையில் அமைச்சர் நிதின் கட்காரி






மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி விதிமுறைகளுக்குப் புறம்பாக ஹெல்மெட் அணியாமல் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்திற்கு வந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மோடியின் அமைச்சரவையில் மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள நிதின் கட்கரி, போக்குவரத்து விதியை மீறி தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமைச் செயலகத்திற்கு மோகன் பகவத்தைச் சந்திக்க வந்தது, அங்குள்ள டிவி காமிராக்களில் பதிவானது.

இது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் சாலைவிதிமுறைகளை போக்குவரத்து அமைச்சரே மீறியுள்ளது பற்றிச் சுட்டிக்காட்டும்படி அமைந்தது. ஆனால் அவர் பதில் எதுவும் கூறாமல் அலுவலகம் உள்ளே சென்றார். டிவி சானல்களும் இதனை ஒளிபரப்ப நிதின் கட்கரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் கூறும்போது, “இது அந்தக் கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் அணுகுமுறையை அறிவுறுத்துகிறதுஎன்று சாடினார்.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment