அமெரிக்காவில் செயல்படும் கூகுள் நிறுவனத்தின் முக்கிய தலைமைப் பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பிச்சை சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்தவர் பிச்சை சுந்தர்ராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட பிச்சை சுந்தர். அமெரிக்க வாழ் தமிழ் கணிப்பொறியாளர் ஆன பிச்சை காரக்பூர் ஐ.ஐ.டியில் பொறியியல் முடித்தார். பின்னாளில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்துள்ளார்.
கடந்த 2004 ல் கூகுள் நிறுவனத்தில் பணியமர்ந்த சுந்தர் கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம், வர்த்தகம், கூகுள் ஆஃப்ஸ், குரோம் மற்றும் உள் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று செம்மையுடன் பணியாற்றி வருகிறார். ஆன்டி ரூபின் பதவி விலகிய பின்னர் ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் தலைவராகினார்.
மைக்ரோசாப்ட் நிறுவத்தின் சிஇஓவாக இந்தியாவின்(ஆந்திரமாநிலம்) சத்யா நாத்தெல்லா சமீபத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment