உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து


வாரணாசியில் இருந்து உத்திரகண்ட் மாநிலம் டேராடுனுக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் ரேபரேலி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

6 பேர்  சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் அறிந்து மீட்புப் பணியினர் விரைந்து சென்று, முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பெட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ50 ஆயிரமும், உயிரிழந்தவர்களுக்கு ரூ2 இலட்சமும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment