தமிழ் நாட்டில்
அமைக்கப்படவிருந்த மீத்தேன் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத் திட்டம் ரத்து செய்யும் முயற்சி
துவங்கி உள்ளதாக மத்திய பெற்றோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தெரிவித்துள்ளார்.
கிரேட் ஈஸ்டர்ன்
எனர்ஜி கார்ப்பரேஷன் என்னும் தனியார் நிறுவன ஒன்றினால் தமிழ் நாட்டின் தஞ்சாவூர்
மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 ச.கி.மீ-ல் அமைக்கப்படவிருந்த நிலக்கரி
படுகை மீத்தேன் வாயு ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யும் மையத்திற்கு கடந்த 2010 ஆம்
ஆண்டு மத்திய அரசு அனுமதி கோரி தமிழகத்திடம் கேட்டிருந்தது.
அதன் பின்னர்
தமிழக மக்கள் மற்றும் மக்களுக்காக பொறுப்பை ஏற்றுள்ளவர்களாக அனைவரும் கூடி
எதிர்ப்பை முன் வைத்தனர். மேலும் தமிழக அரசினால் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இந்திய தொழில் நுட்பக் கழகம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், எம்.எஸ்.சுவாமி
நாதன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் பொதுப்பணித்துறை,
வேளாண்துறை, தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ் நாடு தொழில்
வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைத்து விரிவாக
நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்தது.
தமிழ் நாட்டில் மீத்தேன்
எடுக்கும் திட்டம் ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தர்மேந்திர
பிரதான் ராஜ்ய சபையில் தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களாக அந்நிறுவனம் வங்கி
உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும் 2013, நவம்பர் 3ஆம் நாளோடு ஒப்பந்தம் காலாவதி
ஆகிறதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை
நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment