World's biggest telescope to be built in Japan by 2022


அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா ஆகிய 4 நாடுகளுடன் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் கட்ட திட்டமிட்டுருக்கிறது இந்தியா. இந்த டெலஸ்கோப் கட்டுமான பணியில் 5 நாடுகளைச் சேர்ந்த 100 விண்வெளி விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்

ஜப்பானில் இதே மவுனா கீ மலைப் பகுதியில் ஏற்கனவே சுபாரு என்ற டெலஸ்கோப் உள்ளது. கடந்த 1999–ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள ந்த சுபாரு டெலஸ்கோப் தான் உலகிலே மிகப் பெரியதாகும். கட்டி முடிக்கப்பட்டவுடன், கட்டத் திட்டமிட்டிருக்கும் டெலஸ்கோப் தான் உலகிலேயே மிகப்பெரியது என்ற பெருமை பெறும். இதை 2022–ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே உள்ள சுபாரு டெலஸ்கோப்பை விட 13 மடங்கு பெரியதான இதன் மூலம் ஒசாகாடோக்கியோ இடையேயான 500 கி.மீட்டர் தூரத்தில் சிறிய நாணயம் இருந்தால் கூட மிக துல்லியமாக பார்க்க முடியும். பூமியில் இருந்து மிக தொலைவில் உள்ள நட்சத்திரங்களையும் இதன் மூலம் தெளிவாக காண முடியும். த்திட்டத்திற்காக ரூ.8,500 கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் கால் பகுதியை ஜப்பான் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment