மத்திய மந்திரிகளின் சொத்து கணக்கு வெளியீடு


பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய மந்திரிகள் தங்கள் சொத்து கணக்கை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி பிரதமர் மோடி தனக்கு 26,12,338 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், 1 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 66,41,260.33 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், ஒரு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனக்கு 2,98,48,485 ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது கணவர் ஸ்வராஜ் கவுஷலுக்கு 12,07,81,685 ரூபாய்க்கு சொத்துள்ளதாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரிசபையில் மிக அதிக அளவு சொத்துடையவராக அருண் ஜெட்லி இடம்பெற்றிருக்கிறார். அவருக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து 72.10 கோடி ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment