நோபல் ஃபௌண்டேசன் மூலமாக மருத்துவம், உயிரியல், இயற்பியல், வேதியியல் என்று சமூக நலனுக்கான கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருதை மருத்துவ துறையில் தேர்ந்த கண்டுபிடிப்புக்கு வழங்க தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது நோபல் ஃபௌண்டேசன்.
மூளையில் செயல்படும் அணு எது? இது எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து கண்டுபிடித்து சாதனை புரிந்ததற்க்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஓ'கீஃபே, நார்வேவைய் சேர்ந்த மருத்துவ தம்பதி மே-பிரிட் மோசர், எட்வர் ஐ. மோசருக்கும் இந்த ஆண்டிற்கான மருத்துவத்துறையில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் தான் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் உருவாக்குகிறது என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பின் முக்கிய அம்சம் ஆகும். அதற்கு தான் இந்த மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் சரியாக செல்ல முடிகிறது? அதே பாதையில் அடுத்த முறை செல்லும்போது எப்படி மூளை அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. செல்போன்களில் இருக்கும் ஜி.பி.எஸ். போல் மூளையில் செயல்படும் அந்த அணு எது? போன்றவை இவர்களின் கண்டுபிடிப்புகளின் முக்கிய அம்சமாகும்.
0 comments :
Post a Comment