மகாத்மா
காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-தேதி டெல்லியில் ‘தூய்மை இந்தியா’
எனும் திட்டத்தை பிரதமர் மோடி 62 ஆயிரம் கோடி ரூபாய்
மதிப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களை தூய்மைப்படுத்தும் நோக்கில் தொடங்கி வைத்ததுடன், அவரே துடைப்பத்தை எடுத்து தெருவினை
சுத்தம் செய்தார்.
‘தூய்மை
இந்தியா’ அமைப்பில் இணைய 9
பேருக்கு அழைப்பும் விடுத்தார் மோடி. அந்த 9 பேரும் இயக்கத்தில் இணைய
மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் இந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
JLN ஸ்டேடியத்தில் மராத்தான் ஓட்டபந்தயத்தை தொடங்கி வைத்து பேசிய சச்சின், தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். நமது
சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க
முடியும். ஆரோக்கியமாயிருந்தால்தான் சுகதாரமான இந்தியாவை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியரும் இந்த திட்டத்தில் சேர்ந்து தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment