மோடியின்
அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமுற்றார்.
இதனால் மகாராஷ்டிரா
மாநிலம் பீட் லோக்சபா தொகுதியில்
நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க
கட்சி வேட்பாளராக கோபிநாத்தின் மகள் பீரிதம் முண்டே நிறுத்தப்பட்டார்.
தந்தை இழந்து
தவிக்கும் அந்த மகளுக்கு சார்பாக அனுதாப அலை வீச முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளிவந்த
போது வெற்றியைப் பரிசளித்தது. இந்த முடிவில் 2004ல் நடந்த
தேர்தலில், மேற்கு வங்க மாநிலம்
அரம்பாக் லோக்சபா தொகுதியில், போட்டியிட்ட
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அணில்
பாசு பெற்ற 5 லட்சத்து, 92 ஆயிரம் ஓட்டுகளே, அதிகபட்ச வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனை. அதை
முறியடித்துப் புதிய
சாதனை படைத்துள்ளார் பிரீதம்.
இவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர், அசோக் பாட்டீல் போட்டியிட்டார். இதில்
பிரீதம் முண்டே 9 லட்சத்து, 22 ஆயிரத்து 416 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
அசோக் பாட்டீலுக்கு, 2 லட்சத்து, 26 ஆயிரத்து 95 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
0 comments :
Post a Comment