டெல்லியில் உள்ள
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் நடந்த 42வது பட்டமளிப்பு விழாவில் பாரத பிரதமர்
நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார்.
ஒரு முறை கூட
சிறந்த மாணவனாக இல்லாத தான், சிறப்பாக படித்து முடித்த மாணவர்களுக்கு பரிசும்
பட்டமும் அளிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை தெரிவித்து மகிழ்ந்த மோடி,
"இந்தியாவில் ஆராய்ச்சிகள் பல நடந்தாலும் மருத்துவ
துறை ரீதியிலான ஆராய்ச்சிகள் பின்தங்கி உள்ளது. மருத்துவ வரலாற்றை
நினைவில் வைத்து நாம் உழைக்க
வேண்டும். அவ்வாறான முயற்சி மனித இனத்துக்கு
பலன் தரக்கூடியவையாக அமையும்" என்றார்.
மேலும், “உங்களுக்குள்
ஒரு மாணவனை உயிருடன் வைத்திருங்கள். அப்போது தான் எதையாவது சாதிக்க முடியும்”
என்றும் தெரிவித்து மருத்துவ மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிக்காட்டினார்.
உங்களின் உரிமை
குறித்தும் வாழ்க்கை குறித்தும் விளையாட்டுத்தனமற்ற எண்ணத்தை கொண்டிருங்கள்
என்றும் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி.
0 comments :
Post a Comment