கலைஞர் டி.வி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு




2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினை மத்திய அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாக சி.பி.. தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா, தி.மு.. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்பட 19 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது ஏற்கனவே டெல்லி சி.பி.. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சி.பி.ஐயினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக டி.பி. குரூப் நிறுவனம், குசேகான் புரூட்ஸ்வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாற்றியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது உண்மையான வர்த்தக பணபரிமாற்றம் அல்ல. செல்போன் லைசென்ஸ் பெறுவதற்காக டி.பி.குரூப் கம்பெனிகள் வழங்கிய பணம் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டும் இருந்தது.

குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். டி.பி.குரூப்புக்கும் கலைஞர் டி.வி.க்கும் இடையேயான பண பரிமாற்றத்தை வைத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆர்.ராசா, கனிமொழி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல்கள் வாதாடினர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்

இந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்கும்படி கோரிய மனுவை ஏற்கனவே கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. உடல்நிலையைக் காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜர் ஆவதில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கில் சி.பி.. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக இருந்தது. இன்று காலை டெல்லி சி.பி.. கோர்ட்டு நீதிபதி .பி.சைனி முன்னிலையில் கூடியது. ஆனால் குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு இன்னும் தயாராகாததால் 31–ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி .பி. சைனி அறிவித்தார்.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment