தூய்மை இந்தியா


    இந்த பாரதம் பழம் பெரும் சிறப்புகள் கொண்டது. வரலாற்றில் முதன்மையைத் தன்வசப்படுத்திய நமது பாரத்தினை வளர்ச்சியுற்ற ஒரு தேசமாக மாற்றியமைக்க எண்ணற்ற மனிதர்கள் முயற்சித்தனர். அத்தகைய முயற்சி ஏன் விளைய வேண்டும்? அப்படியானல் வரலாற்றில் ஆய்வின் போது ஒவ்வொன்றிலும் முன்னிலை பெற்ற நமது தேசத்தில் அதாவது வளர்ச்சியிலும் கூட தன்னிறைவுற்ற தேசத்தில் மறுபடியும் வளர்ச்சி பற்றிய பேச்சு மற்றும் அதற்கான முயற்சியும் அத்தியாவசியமாகிட என்ன காரணம்? இந்தியாவின் செல்வத்தைக் கொண்டு இப்போதைய உலக மக்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்கு திருப்தியாக உணவளிக்க இயலுமாம்! நீரும் அபரிமிதமாக கிடைத்தமையால் விவசாயம் கோலொச்சியது உணவில்லா நிலை என்பதே இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று 500 அடி வரை ஆழ்த்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீரைக் காணவில்லை. ஆறுகளினை இணைக்கச் சொல்லி அக்கரை கூட எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் விமோச்சனமில்லை.

உலக பிரசித்திப் பெற்ற கோஹினூர் வைரம் இருந்தது இந்தியாவில் தான். கொடுத்து வாங்கும் பண்டமாற்று முறையும் நீதி வழுவாத தன்னொழுக்கமும் வாழ்ந்து இங்கேதான். சுரண்டுவோரை அனுமதித்தன் விளைவாக நாம் தொலைத்தவைகளையே மீண்டும் வளர்ச்சி என்ற பெயரில் தேடிக் கொண்டிருக்கிறோம். ஒரு முறை ஒரு பெயரைச் சொல்லி அந்த பெயரில் நாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு ராஜாஜி இல்லை என்றாராம். எப்படி என்றதற்கு அப்படி ஒரு நாடு இருந்தால் அந்த நாட்டிலும் இந்தியா கடன் வாங்கி இருக்கும் என்றார் நகைச்சுவையாக. இது ஏளனமாக எனக்கு தெரிந்தாலும் இந்த அளவிற்கு கடன் சுமை கொண்ட நாட்டில் சுகாதாரம் மட்டும் வளமாகவா இருக்கும்! 

பொதுவாக சுகாதாரமின்மையால் ஒரு நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சுகாதாரம் மக்களுக்கு நோயினை உண்டாக்கும். நோயுற்ற சமூகத்தில் நிலைதடுமாறும் மனிதனின் வாழ்க்கை ஆபத்துமிக்கதாகவும் மானிட அழிவுக்கு வித்திட்டதாகவும் அமைந்திடும் என்பதை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.

     கடந்தவைகளால் நிகழ்ந்த நிகழ்காலத்தில் தொலைத்தவையைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிராமல் அதை பெறுவதற்கான முயற்சியில் பயணப்படுத்த தற்போதைய பாரத பிரதமர் அவர்கள் கடந்த அக்டோபர் 2-ல் ‘தூய்மை இந்தியா’ என்ற மகத்தான திட்டத்தை ஆரம்பித்து செயல்படுத்தியுள்ளார். கடந்த காலத்தில் நிகழ்ந்த சுரண்டலால் இத்தேசம் இழந்ததை போல எதிர்காலத்திலும் விளையாதிருக்க இத்தகைய முயற்சி அவசியம்தான். அதிலும் தற்போதைய நிலைமையில் அத்தியாவசியமும் கூட.

     அக்டோபர் 2-ல் அதாவது மகாத்மா காந்தியின் 145வது பிறந்த தினத்தில் டெல்லியில் உள்ள ராஜ வீதியில் நடந்த விழாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, “நான் அரசியல் பேசவில்லை. இது அரசியலையும் தாண்டியதாகும். இது என் நாட்டுப்பற்றால் உருவானது. இதனால் அரசியல் ஆதாயம் தேட எண்ணவில்லை. தூய்மையான இதயத்துடன் இதைச் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டு இந்த திட்டத்திற்கான நோக்கத்தை வலியுருத்தியுள்ளார். 

     திட்டத்தை தொடங்கியதுடன் நில்லாது தானும் பங்கு கொண்டும் மற்றவர்களையும் பங்கேற்க அழைப்புவிடுத்தும் நெகிழகச் செய்தார். அவர் மகாத்மா காந்தி வசித்த வால்மீகி நகர் பகுதியினைத் துடைப்பம் கொண்டு மக்களோடு மக்களாக கூட்டிப் பெருக்கினார். 


   விளையாட்டு, சினிமா, தொழில்துறை, அரசியல் போன்றவற்றில் பிரபலமானவர்களான சசி தரூர், கமலஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, சச்சின் தெண்டுல்கர், அனில் அம்பானி, ‘Taarak Mehta Ka Ooltah Chashmah' என்ற தொடரின் இயக்குனரான அஜித் குமார், பாபா ராம்தேவ் மற்றும் மிருதுலா சின்ஹா ஆகிய ஒன்பது பேருக்கும் தூய்மை இந்தியா திட்டத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தி தூது அனுப்பியுள்ளார். பொதுவாக பிரபலமானவர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அந்தந்த துறை சார்ந்த பிரபலங்கள் வேண்டுகோளை ஏற்று வழி நடக்கையில் அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித தூண்டுதல் தோன்றி அக்கரை வெளிப்படும். அதைச் சரியாக மோடி புரிந்து கொண்டு இவ்வழியினை தெரிவு செய்துள்ளார். 

     அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிடும் இந்தியாவில் சினிமா பிரபலங்களைவிட்டால் வேறு யார்க்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது?!. அதனால்தான் சினிமாத் துறை சார்ந்த கமல்ஹாசன், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான் மற்றும் அஜித் குமார் ஆகியோர்க்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

     பிரதமரால் தூது அனுப்பப்பட்ட ஒன்பது பெயர்களில் ஒருவரான கமல்ஹாசன், “குறிப்பிட்ட ஒன்பது நபர்களில் ஒருவனென்பதை பாக்கியமாக கருதும் நான், பகுத்தறிவினால் மனிதம் அணுகி வாழ்கிறேன். கொடுக்கப்பட்டதை ஒரு புதிய கடமையாக கருதாமல்  செய்த கடமைக்கான பாராட்டாக நினைத்து தொடந்து செயல்படுவேன் என்பதைச் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்ட தமிழ் சினிமாவின் மூளையாக விளங்கும் சகலகலாமன்னன், “இந்த ஒன்பது பேர் இன்னொரு ஒன்பது பேரை பரிந்துரைக்கச் சொன்னார் பிரதமர். முடிந்தால் 90 லட்சம் பேரைச் சேர்ப்பேன்” என்று அழைப்பை எற்று அறிக்கை சமர்பித்துள்ளார்.


 மோடி அவரின் அழைப்பினை ஏற்று ‘Taarak Mehta Ka Ooltah Chashmah' என்ற தொடரின் இயக்குனரான அஜித் குமார் குறிப்பிடுகையில் “எங்கள் அணிக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். எங்கள் தொடருக்காக வெளி நாடுகளுக்கு படப்பிடிப்பு தொடர்பாக போக வேண்டி வரும். அப்போது எல்லாம் அந்த நாட்டின் தெருக்களின் தூய்மை கண்டு ஆச்சரியப்பட்டோம். இதுபோல ஏன் இந்தியாவில் செயல் படுத்த முடியவில்லை? என்று கேட்டுக் கொள்வோம். நாம் இருக்கும் இடம் சுத்தமாக இருந்தால் நமது சமூகமும் சுத்தமாக இருக்கும்.” என்று குறிப்பிட்டதுடன் தாங்கள் மோடியுடன் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் தனது டிவிட்டர் கணக்கின் வாயிலாக மோடி அவர்களின் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான அழைப்பை கணிவுடன் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். பாலிவுட் திரைப்பட நடிகர் மற்றும் நடிகையான சல்மான் கான் மற்றும் பிரியங்கா சோப்ராவும் அழைப்பை ஏற்று கொண்டதாகவும் தொடந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


பிரதமரால் குறிக்கப்பட்ட ஒன்பது நபர்களில் ஒரேயொரு அரசியல்வாதியான காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சசீ தரூர் மோடியின் அழைப்பை சில சர்ச்சைகளுக்கு மத்தியில் ஏற்றுள்ளார். இதன் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் நான் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தமையால் மோடியின் அழைப்பை தெரிவிக்க தொடர்பு கொண்ட உள்துறையின் அழைப்பை ஏற்க முடியவில்லை. பிரதமர் அழைப்பு விடுத்தமையால் நான் பி.ஜே.பிக்கு மாறப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை சுகாதாரமிக்கதாக மாற்றப்போவதாக தெரிவித்து சுதந்திரத்தை விட சுகாதாரம் நாட்டிற்கு முக்கியமென்ற காந்தியின் பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்ததாக புகழ்ந்துள்ளார்.
   
     பிரபலங்களில் தங்கள் பொறுப்பை உணந்த சிலரும் இந்த திட்டத்தினை வரவேற்று தானும் ஒரு பங்காளராக ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் அமீர்கான், சூர்யா போன்றவர்கள் ஆவர். சத்தியமே ஜெயதே வாயிலாக எண்ணற்ற சமூக பணிகளை ஆற்றி வந்த அமீர்கான் இது குறித்து கூறுகையில் இத்தகைய மகத்தான திட்டத்தில் என்னையும் இணைத்துக்  கொண்டு பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் தூதராகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளார். இதில் சூர்யா, “நம்மையும் நமது இல்லத்தையும், சுற்றுப்புரத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். குழந்தைக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சுகாதாரமான சுற்றுப்புரத்தை அளிப்பதும் முக்கியம். ஆரோக்கியமான இந்தியாவிற்கு தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம்.” என்று தன்னுடைய ஆதரவினையும் பதிவிட்டுள்ளார்.
      
      இதேபோன்று நமது ஜனாதிபதி அவர்களும் தான் படித்த கிர்னகர் ஷிப் சந்திரா என்ற மேற்கு வங்காளத்தில் கிமாஹரில் உள்ள பள்ளியில் தொடங்கி வைத்து “ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நாளொன்றிக்கு 2 மணி நேரம் அல்லது வருடத்திற்கு 100 மணி நேரம் இந்த திட்டத்திற்கு ஒதுக்கி தன்னுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இத்துடன் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா இருபது லட்சம் இத்திட்டதிற்காக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
     மேலும் இந்த திட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பி.ஜே.பி கட்சியினரான வெங்கைய நாயுடு, அமைச்சர் ஷியாமலா, அனில் சர்மா, நிஜாமா ஹெப்துல்லா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று பலரும் இணைந்துள்ளனர்.

  -  ரசிகன்


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment