உணர்வூக்கிகளாய்
உள்ள
நிறங்கள்
நிர்மூலமாகின.
வார்த்தைகளை
கொன்றுவிட்டு அவை
மௌனத்தை
அர்த்தப்படுத்தின.
விணைகள்
துரித தன்மையைத்
தொலைத்துவிட்டு
ஊர்கின்றன.
மகிழ்ச்சி
தன் அரிய
தவத்தில்
ஆழ்ந்தேக்கிடக்கிறது.
தயக்கம்,
தன் அயர்ச்சி
முறிக்காமல்
கொழுத்துக்கொண்டிருக்கிறது.
கவலை
தன்னை
பிரகடனப்படுத்த
முயற்சிகளை
முடக்கியுள்ளது.
கிழியாத
விதையுறையாய்
மூடிக்கிடக்கின்றது
கண்கள்.
அலட்சியம்
அதிகார
சிம்மானசனத்திலமர்ந்து
மயில் தோகையா
வீசும்!
மாற்றங்களுக்குரிய
மரியாதையை
ஏமாற்றங்கள்
கொலை
செய்திருந்தன.
பாதியில் முடிந்த
கவிதையும்
கேலிப் புன்னகை
செய்கிறது.
நீல வானம் போல
நீண்ட என்
வாழ்வில்
நிறங்கள் எழுதிய
கவிதையில்
உணர்வூக்கிகளை
மட்டும்
காணவில்லை.
0 comments :
Post a Comment