கனமான
வார்த்தைகளால்
நாக்குச்
சுழலவில்லை.
தற்கொலை செய்து
கொண்ட
வார்த்தைகளால்,
மௌனம் ஆட்சி
செய்கிறது
என்னை.
வானவெளியில்
ஒரு ஒற்றை
மேகமாய்
நான்.
மேகத்தின்
மடியிலே
மழை நீர் போல
என்னில்
ஒரு நிழல்.
காரிருள் தின்னாத
கலைத்துவ நிழல்.
மழலை மலர்பித்த
ஓவியமாய்!
கவிஞன் கதைத்த
காவியமாய்!
என் நிழல்,
நினைவில்.
வழி மறுக்கும்
விழி தவிக்கும்
நிழல்
தென்படுகையில்.
உட்கூடும்
ஒரு கருவில்
ஓயாது புணைக்
கதைகள்.
விட்டில்
பூச்சிக்குப் பிடித்தது
விளக்கொளி தான்.
சுடுமென்றால்
சுவையெனுமே!
வண்ணப்பூவாய்
எனை ஈர்த்து
எண்ணப்பூவில்
மலர்ந்தவளே,
தனிமையில்
நான்!
நிழலில்
நீ!
இங்கே வாழ்க்கை,
வாழப்படுகிறதா?
ஆளப்படுகிறதா?
நீ,
நிஜமாகும் போது
வாழப்படும்.
நான்,
கனவாக இருக்கும்
வரை
ஆளப்படும்.
-
ரசிகன்
0 comments :
Post a Comment