உலகின் மொழிகளின் வரலாற்றில் ஆதி முதலான தமிழை வளர்ப்பதில் கவிஞர்கள்,
எழுத்தாளர்கள் மற்றும் தமிழாசிரியர்களையும் விட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களே என்ற கருத்தினை ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் நம்பிக்கை இல்லம் அடிக்கல் நாட்டு விழாவில்
கலந்து கொண்ட அறிவியல் நகரத் துணைத்தலைவருமான உ.சகாயம் அவர்கள் பேசுகையில்,
இளைஞர்கள் லஞ்சம் வாங்குதலை தவிர்க்க தயார்ப்படுத்திக் கொள்ள
வேண்டுமென்றதோடு
அதன் பேரழிவைச் சுட்டிக்காட்ட விரும்பியவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயத்தில்
தொடங்கப்பட்ட விவசாய நலனுக்கான உழவன் உணவகம் திட்டம் கண்ட தோல்வியை
சாட்சிப்படுத்திக் கூறினார்.
குழந்தைகள் அனைவரிடமும் நல்ல பண்புகள் உண்டு. அவர்களின் நாளை லட்சிய
நோக்கத்தோடு உருவாக்கப்படுபவை என்ற கருத்தை முன்னிருத்தியவர் ஆனால் பெரியவர்களானதும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற சுய நலச் சிந்தனை பெற்று பணத்தாசைப் பற்றிக்
கொள்கிறதாகவும் கூறினார். மேலும் தன் வாழ்வின் கடந்து வந்த தருணங்களை பகிர்ந்து கொண்டார்.
0 comments :
Post a Comment