தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த மத்திய அரசு அலுவலகங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் ஜி மெயில், யாஹூ போன்ற தனியார் இ-மெயில் சேவைகளை இனி உபயோகப்படுத்தக்கூடாது எனவும் 'நிக்' வழங்கும் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிக் - Nic எனப்படுவது இந்திய அரசின் National Informatics Centre (NIC) ஆகும். தனியார் இ-மெயில்களின் செர்வர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இந்திய அரசின் நடவடிக்கைகளை அதன் மூலமாக கண்காணிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment