உலகக்கோப்பையில் கலந்துகொள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதற்போட்டியில் பாகிஸ்தானை அபார வெற்றி பெற்றபின், தென் ஆப்பிரிக்காவுடனான அடுத்த போட்டியில் பங்குகொள்ள இந்திய அணியினர் மெல்போர்ன் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
வழக்கமான பரிசோதனைக்காக கேப்டன் தோனி மெட்டல் டிடெக்டரின் வழியே சென்றார். டிடெக்டர் அபாய ஒலி எழுப்பவே அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தோனி அவர்களின் சட்டை மற்றும் பேண்ட் பைகளில் சோதனை செய்யப்பட்டது. மறுபடியும் மெட்டல் டிடெக்டர் வழியே செல்ல, அது மீண்டும் அபாய ஒலி எழுப்பியது. பின்னர் தோனியின் காலணிகளை சோதனை செய்த விமானநிலைய அதிகாரிகள் அதில் இரும்பு போன்ற சிறிய பொருள் இருந்ததை கண்டறிந்தனர். அதன்பின்னர் தோனி முதலிய இந்திய அணியினர் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து இந்திய அணியினரோ அணி நிர்வாகமோ எந்த அறிக்கையும் தரவில்லை.
Y should they give, they are to human beings only know. it is a regular checkups
ReplyDelete