தமிழகத்தின் கடையநல்லூரில்
பிறந்து சிங்கப்பூர்வாசியாக வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளரான கே.டி.எம்
இக்பாலுக்கு சிங்கப்பூரின் உயர்ந்த கலாச்சார விருது (Cultural Medallion) வழங்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் கவிஞர் 1970க்கும் 1980க்கும் இடைப்பட்டக்
காலத்தில் சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் பணிபுரிகையில் 200க்கும் அதிகமான குழந்தைகளுக்கான
பாடல் இயற்றியுள்ளார். மேலும் அன்னை, இதய மலர்கள், வைரக்கற்கள் உள்ளிட்ட 7 கவிதைத்
தொகுப்புகளையும் எழுதியுள்ளார். அண்மையில்தான் இவர் பணி புரிந்த வங்கியிலிருந்து ஓய்வு
பெற்றார்.
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பாக தமிழவேள் இலக்கிய விருதும் (1999), தாய்லாந்து
அரசு வழங்கிய தென்கிழக்காசிய இலக்கிய விருதும் (2001), சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் "கலா ரத்னா" விருதும் (2004) உள்ளடங்க ஏராளமான
விருதுகளையும் பெற்றுள்ளார்.
இது குறித்து கவிஞர் இக்பால் கூறும் போது: "இது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருது எனக்கு ஒரு மகத்தான மரியாதை என்று கூறியுள்ளார். எனது முதல் காதல் கவிதை மீதுதான். இந்த மகத்தான் விருது எனக்கு கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை".
இந்த விருதுடன் அவருக்கு 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் வழங்கபட்டது. மேலும் இந்த விருது 68 வயதான சிற்பி சொங் பெக் சியோங், நாடக கலை இயக்குனர் 51 வயதான ஆல்வின் டான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக 115 கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கபட்டு உள்ளது.
0 comments :
Post a Comment