பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டின் 69 வயதான பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்குஇரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம் தன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக,  இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது. என பரிசு வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.

பேட்ரிக்கின் பெரும்பாலான படைப்புகள் நினைவு, அடையாளம் மற்றும் குற்ற உணர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தியே இருக்கும். இவரது பல படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள போதிலும், இவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியில் பரவலாக அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 25க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். குறிப்பிடும் வகையில் Rue des boutiques obscures என்ற நாவலுக்காக Prix Goncourt எனும் விருதும் Grand prix du roman de l'Académie française என்ற விருது Les Boulevards de ceinture எனும் நூலுக்காக பெற்றுள்ளார். மேலும் இவர் 2012-ல் Austrian State Prize for European Literature என்ற விருதும் 2010-ல் Prix mondial Cino Del Duca என்ற விருதினை Institut de France இடமிருந்தும் பெற்றுள்ளார்.



About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment