கடவுள் கொள்கையின் விளைவாக அறிவியலாரின்
மகத்தான கண்டுபிடிப்புகள் பலவாறு துண்டாடப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றே. அதேபோல்
சாதிக்க துடித்தவர் தன்னை தயார் படுத்திக் கொள்ளும் இளமையில் ஏராளமான வசைகளையும்
அவமானங்களையும் சந்தித்தவர்களே. “புத்திசாலித்தனம் என்பது பிறவியிலேயே வருவதில்லை.
அது கையகப்படுத்திக் கொள்வதுதான்” என்ற கருத்தை பிரதிபளிக்கும் அவரின் வாழ்க்கை
ஒரு நீண்ட பயணத்தில்தான் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
ஒரு
ஆசிரியரின் தூண்டுதலால் கலபகோஸ் என்ற தீவிற்கான ஐந்தாண்டு கப்பல் பயணம்தான் அது. பயணத்தின்
பலனாக சேகரித்த தகவல்களையெல்லாம் தொகுத்து, அதன்வாயிலாக கண்டறிந்த
உண்மைகளையெல்லாம் கட்டுரையாக்கினார் உட்சபட்ச நுண்ணறிவு கொண்ட பிரான்ஸிஸ் கால்டன்
என்பவரின் சகோதரர். அதே கருத்தினை கட்டுரையாக ஆல்பிரட் ரசல் வெலஸ் என்பவரும் எழுத,
பின் இருவரும் சேர்ந்தே அதை வெளியிட்டு தோற்றனர். அதன்பிறகு, ‘உங்கள் தந்தை
குரங்கா? தாய் குரங்கா?’ என்ற கேள்விக்கு, “மாச்சரியத்தாலும், பொய்யாலும்
நிரப்பப்பட்ட நாகரிகம் அடைந்த மனிதனிலிருந்து பிறப்பதைவிட குரங்கிலிருந்து
தோன்றுவதை பெருமையாக கருதுகிறேன்” என்று பதிலிறுத்த அவர் ‘உயிர்களின் தோற்றுவாய்’
என்ற தன் முதல் புத்தகத்தை 1250 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டு ஒரே நாளில் விற்று
தீர்த்தார்.
நாத்திகம் பிரச்சாரம் செய்யும் துரோகி என்று அவரை குரங்காகச்
சித்தரிக்க, டி.ஹெச்.ஹக்ஸிலி என்பவர் மட்டும் கருத்தை ஒப்புக்கொண்டு புல்டாக்
எனும் பெயர் பெற்றார். “வாழ்க்கை குறித்த ஒரு பிரமாண்டமான பார்வை இருக்கிறது.
மிகச் சாதாரண உயிரினங்களில் இருந்தே அழகான அதிசயத்தக்க பல உயிரினங்கள் தோன்றின”
எனக் குறிப்பிட்டதை இவ்வுலகத்தின் பிரமாண்டத்தை விவரிக்க பரிணாம வளர்ச்சி ஒன்றே
உரிய வாதம் என்று ரிச்சர்ட் டாக்கின்ஸால் அங்கீகரிக்கப்பட்டார். சனாதனவாதிகள்
ஏற்றுக்கொள்ளாத ‘குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்’ என்ற கருத்தை தெரிவித்த
ஐ.என்.எஸ் பீகிள் கப்பலில் பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் கூட புராதன
கொள்கைவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
0 comments :
Post a Comment