தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த ஒரு மிகச் சிறந்த பாடலாசிரியர். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப் பெயர்களைப் பயன்படுத்தி 250க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கவிதைகள், நாவல்கள், புதினங்கள், சுயசரிதைகள், கட்டுரைகள், காவியங்கள், தத்துவம் மற்றும் நாடகங்கள் என எல்லாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்த இவர் படித்தது எட்டாம் வகுப்பு தான். ஆனால் பாரதியார், பாரதிதாசன், கம்பன் மற்றும் வள்ளூவனை பிடித்துக் கொண்டு தன் பாதையில் பயணித்தார் முத்தையா எனும் இயற்பெயர் கொண்ட இவர். ‘குழந்தைக்காக’ எனும் படத்தில் சிறந்த வசனமெழுதி தேசிய விருது பெற்றார். முதன் முதலில் சிறைவாசம் செய்த போது தான் ‘மாங்கனி’ எனும் காவியத்தைப் படைத்து காவியமும் தன்னால் எழுத முடியும் என்பதை நிரூபித்தார். 

       சேரமான் காதலி எனும் நூலுக்காக சாகித்திய அகாடெமி விருது பெற்றவர் இயேசுவைப் போற்றி இயேசு காவியம் பாடியதோடு இந்து மதத்தையும் அர்த்தப்படுத்தியுள்ளார். பகவத் கீதையை தேன் தமிழில் படைத்துள்ளார். கவிஞராகவும் பாடலாசிரியராகவும் மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்நாடு அரசு அவரின் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் மணிமண்டபமும் மார்பளவு சிலையும் அமைத்துள்ளது. அங்கே அரங்கம் ஒன்றில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த கவிஞன் யார் தெரியுமா?

“உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்”
ன்னுப் பாடின நம்ம கவியரசு கண்ணதாசன்தாங்க.



About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment