அரிசி ஆலைக்கு மின் இணைப்பை மாற்றி தர ரூ.20000
லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில்
தியானேஸ்வரன் நடத்தி வரும் அரிசி ஆலைக்கு உயர் மின் அழுத்தம் மாற்றி தர வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
அதன்படி உயர் அழுத்த மின் இணைப்பு வழங்க மின் வாரியத்தினர் பரிந்துரை
செய்துள்ளனர். அதன் பொருட்டு உரிமையாளர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலத்தில் மனுக் கொடுத்துள்ளார்.
மனுவை விசாரித்த செயற்பொறியாளர் சுப்பிரமணியம்
இணைப்பை மாற்றி தர ரூ.50000 கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு தொகை தர முடியாது என
மறுத்த தியானேஸ்வரன் ரூ.20000 தர சம்மதித்தார்
ஆனாலும் அத்தொகையைக் கொடுக்க மனமில்லாத அரிசி
ஆலை உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கமான
பானியில் செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டு நீண்ட விசாரனைக்குப்பின் கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment