ஸ்வீடன் நாட்டில் அக்டோபர் 21, 1833ல் பிறந்த இவர் வெடி மருந்துகளைக் கண்டுபிடித்து பெரும் பணக்காரர் ஆனவர். ஆக்கத்திற்கான தன்னுடைய கண்டுபிடிப்பு அழிவுக்கு பயன்படுத்தியது கண்டு வெகுண்டவர், மக்களின் நன்மைக்கென வரும் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவென ஒரு அறக்கட்டளை நிறுவி, ஒரு பதக்கமும் 8 million SEK தொகையும் பரிசாக கொடுக்கப்படும் என்றதுடன் இவைகள் பௌதீகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், உலக சமாதானம், உடலியல், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும்படியும் செய்தார். 

1901ல் இருந்து இதுவரை 835 நபர்களுக்கும் 21 நிறுவனங்களுக்கும் இவரது பெயரிலான அந்த விருது கிடைத்துள்ளன. இரக்க குணமும் வள்ளல் தன்மையும் ஒரு சேரக் கொண்ட இந்த மனிதர் தன்னுடைய சொத்தில் 94 சதவிதிகத்தை இதற்காகப் பயன்படுத்திவிட்டாராம்! 

வரின் அறக்கட்டளை: ‘நோபல் பௌன்டேசன்’. 
இதன் நிறுவனர்: ஆல்ஃபிரட் நோபல்.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment