அரசு வெளியிடும் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் படங்கள் வருவது குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது
குறித்து ஆய்வு
செய்து
அறிக்கை தாக்கல் செய்ய
பேராசிரியர் என்.ஆர்.மாதவமேனன் தலைமையிலான 3 பேர்
கொண்ட
குழுவை
உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இந்தக்
குழு
தனது
பரிந்துரையை உச்ச
நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
பேராசிரியர் என்.ஆர்.மாதவமேனன் குழு “அரசு வெளியிடும் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர்
மற்றும் முதலமைச்சர்களின் படங்கள் மற்றும் அவர்களின் பெயர்
மட்டும் தான்
இருக்கவேண்டும்.
"அதில்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் இடம்
பெறக்கூடாது. மக்கள்
வரி
பணத்தை
தவறாக
பயன்படுத்த கூடாது.
"அரசு
சார்பில் வெளியிடப்படும் இந்த
விளம்பரங்களுக்கு உரிய
வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் செலவுக்கான தணிக்கை உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment