கம்பீரமான தோற்றம் கொண்ட ஒருவர் பள்ளி, கல்லூரியில் கால் பந்து வீரராக விளங்கினார். ‘ஆல் அமெரிக்கன்’ என்ற படத்தில் நடித்ததன் விளைவாக நடிகரானார். குதிரை சவாரியில் நாட்டம் மிகுந்த இவர், வீர தீர சாகச படங்களில் நடித்ததோடு நில்லாமல் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படைக் கேப்டனாகி தன்னை நீருபித்துவிட்டார் வீரனாக. தொலைக்காட்சி, வானொலியில் வர்னனையாளராக பணியாற்றிய இவர் அரசியல் ஆர்வம் கொண்டு 1970-ல் கலிபோர்னியா கவர்னர் ஆகினார். சிறந்த நிர்வாகி பட்டம் பெற்றதோடு 1974-ல் ஓய்வு பெற்று குடியரசு கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வென்றும் விட்டார். பதிவியேற்ற சில நிமிடங்களில் ஈராக்கில் பிணைக் கைதிகளாக இருந்த 444 பேரை விடுதலை செய்ய முயன்று வென்றார். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த இவர் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு திரும்பும் போது இளைஞன் ஒருவனால் சுடப்பட்டு இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் உயிர்பித்தார் ரோனால்ட் ரேகன்.


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment