சூரியனயே காதலிச்சவராச்சே
இந்த கடவுள் கான்செஃப்ட் என்னென்ன பண்ணிருக்குங்க! வரலாற்று
மேதைகளால் ‘பிரத்தேகமாகச் சிந்திக்கத் தொடங்கிய முதல் தனி மனிதர்’ () என்று
புகழப்படுபவர் எகிப்தினை கி.மு 1380 ல் ஆட்சி செய்தவர். அலெக்சாண்டர் மாதிரி
இவரும் டீனேஜ்ல பதவி ஏற்றார். அந்த வயசுல இந்த மகா மன்னருக்கு ஒரு யோசனைங்க! அது
என்னானா, சூரியன் தான் இந்த உலகம் இயங்க, உருவாக, இப்படி எல்லாத்துக்கும் காரணம்.
அதுனால சூரியன் தான் கடவுள். வேற எதையும் கடவுள்ன்னு கும்புடக்கூடாதுன்னு தீவிரமாக
பிரச்சாரம் செய்தவர் இருந்த கோவில்கள் அனைத்தையும் இடித்து இல்லாமல்
செய்துவிட்டார் தன்னுடைய அப்பா சிலை உட்பட. ஆமென் ஹோடப் என்ற மக்களின்
அபிமானத்திற்குரிய கடவுளின் பெயரினை நிராகரித்துவிட்டு அக்நௌடன் (அக்-என்-அடான்=
சூரியனுக்குப் பணிவிடைச் செய்பவன்) என்னும்படி மாற்றிக்கொண்டு அமர்னா என்ற இடத்தில்
பெருப் செலவில் மேற்கூரை இல்லாத கோவிலொன்றை சூரியனுக்காக கட்டி ஒரு ஆகஸ்டில் தனது
மனைவி பேரழகியான நெஃப்ரடீ உடன் பெருந்திரளாக வந்த மக்களுடன் அந்த கோவிலுக்கு முதல்
பிரவேசம் செய்தாராம் அந்த சூரிய பைத்தியம். இவரு கவிஞரும் கூட (ஆமா பின்ன சூரியனயே
காதலிச்சவராச்சே! கவிஞரா இல்லாம எப்படி)
0 comments :
Post a Comment