எங்கிருக்கிறாய்?
என்னை உன்னில்
எப்போது
அறிமுகம் செய்து
கொண்டாய்?
என் நினைவில்
ஒரு
புலனாய்வு.
உன் நிழலில்
கரைந்து போன
என்னை
காணாமல் செய்வது
என்னிலா?
ஏனிந்த
குளறுபடிகள்?
விளையாடும் அன்பே
விணையாற்றும் நீ
விடியலாகலாமே!
நாள்தோறும்
நழுவாத இரவில்
வலுவாக சிக்குண்ட
நான்
கனவுகளற்ற
வேளைகளுடன்
கழிக்கின்றேன்.
கரிய நிழலில்
தொலைந்து போனது
பௌர்னமி.
காரிருள்
வேட்கையில்
விண்மீங்களோ
விருந்துகளாயின.
விடைத் தேடி
அலையும்
காலம் போல
நானும்
தேடுகிறேன்.
ஏனிந்த
மௌனப்போராட்டம்?
மறைந்திருந்து
ஆட்டுவிக்கும்
உன் நாடகத்தில்
நடிகனாக்கினாய்
நடிகையாய் தான்
உன்னைக்
காணவில்லை.
எட்டு திசையும்
என் வசம்
ஆனாலும்
உன் வசமிருக்கும்
நான்,
என்னைத்
தேடவில்லை.
என் வசமில்லாத
நீ
உன்னைத்
தேடுக்கொண்டிருக்கிறாய்!
யார் நீ?
- ரசிகன்
0 comments :
Post a Comment