ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை ‘W’. அதாங்க WWW (World Wide Web). இந்த வெப்சைட் எனும் வலைப்பின்னல் எப்படி உருவாச்சுனா, வான்னவார் புஷ் என்ற அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி சாலைகளின் தலைவரின் கனவுகளில் இருந்து தான் பிறந்தது.
1945 ல் ‘அட்லாண்டிக் மன்த்லி’ என்ற இதழில் ‘நாம் நினைத்தால்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் தான் இந்த வலைப்பின்னலுக்கான அடிப்படை வெளி வந்தது. அதில் “இப்போது நம்மிடமுள்ள கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மனிதனால் உலகம் இதுவரை பெற்றுள்ள அத்தனை அறிவையும் அணுகவும் கட்டுப்படுத்தவும் முடியும்” என்றும் “மனித அனுபவங்களின் கூட்டுத்தொகை பயங்கரமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த அறிவு வலையின் ஊடே உலவ நாம் பயன்படுத்தும் முறைகள் புராதனமாக இருக்கின்றன.” என்றும் எழுதியுள்ளார். இப்படி தகவல்களை இணைப்பதற்கு மெமெக்ஸ் என்று பெயர் சூட்டி ஹைப்பர் லிங்க் என்ற கருத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார் இந்த ஆராய்ச்சியாளர்.
இதுல மேட்டர் என்னனா, இப்படி யோசிச்சு எழுதனப்ப கம்பூயூட்டர் வைக்க நேரு ஸ்டேடியத்துல பாதி வேணுமாம்ங்க!. இந்த ‘’ஹைப்பர் லிங்க்’’ கருத்து புரியனும்னா சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் புத்தகத்தின் கட்டுரையில ஒரு சின்ன கதையால விளக்கமாச் சொல்லிருக்காரு படிச்சுப்பாருங்க.
0 comments :
Post a Comment