செய்தியோ தகவலோ ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறிப்பிட்ட மனிதருக்குச் சென்றடைய பண்டைய மெஞ்ஞான காலம் முதலாய் இன்றைய விஞ்ஞான காலம் ஈறாய் எண்ணற்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
குறிப்பாக யுத்த காலங்களில் தகவல் பரிமாற்றம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளன. காரணம், இந்த தகவல் பரிமாற்றம் யுத்தங்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயித்துள்ளன. Sun–Tzu என்ற சீன அறிஞர் எழுதிய Art of War (போர்க்கலை) என்ற புத்தகத்தில் பல யுத்திகளை விளக்கியுள்ளார். இப்படியாக கையாளப்பட்ட யுத்திகளில் ஒன்று தான், ரோமானிய அரசரான ஜூலியஸ் சீசர் பயன்படுத்திய மொட்டைத் தலைச் செய்தி.
இவர், வேண்டியவர்க்கு தெரிவிக்க வேண்டிய தகவலை மொட்டை அடிக்கப்பட்ட ஒரு அடிமையின் தலையில் அழியாத மையால் எழுதிவிடுவார். சில தினங்களில் முடி வளர்ந்து செய்தியை மறைத்துவிடும். நடைபயண மார்க்கமாக பயணிக்கும் அந்த அடிமை வேண்டிய இடம் அடைந்ததும் முடி அகற்றப்பட்டு தகவல் வாசிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment