எப்போது
ஆச்சரியம் வருகிறது? என்ற வினாவிற்கு கலைமாமணி, பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளால் தன்
இருப்பை அழுத்தமாக பதிவு செய்து கொண்டு தமிழ் இலக்கியத்துறையிலும் சினிமாத்துறையிலும்
பெரும் பங்காற்றி வரும் மெட்டூராரின் பதில்,
“தலையில்லாமல்
ஆறு நாட்கள் உயிர் வாழுமாம் கரப்பான் பூச்சி.
ஒரே நாளில் ஐம்பதுமுறை
உறவுகொள்ளுமாம் சிங்கம்.
கால்களைக் கொண்டு
ருசி அறியுமாம் வண்ணத்துப்பூச்சி.
மனித உடம்பின்
கடினத்தசை நாக்குதானாம்.
மூன்று ஆண்டுகள்
தொடந்து தூங்குமாம் நத்தை.
இப்படி, அறியாத
ஒன்றை அறிந்துகொள்ளும்போதோ முடியாத ஒன்றை முடித்துக்காட்டும்போதோ காணாத ஒன்றைக்
கண்டு கொள்ளும்போதோ வருகிறது ஆச்சரியம்.” என்று முடிக்கிறார் கள்ளிக்காட்டு
இதிகாசம் படைத்து சாகித்திய அகாடெமி விருது பெற்றதுடன் 28 வயதில் சுயசரிதை எழுதிய
கவிப்பேரரசு வைரமுத்து.
0 comments :
Post a Comment