ஒரு மெகா கோடீஸ்வரர் விமான பயணத்தில் பறந்து கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த சக பயணி, ஒரு இளைஞன், சில கேள்விகளுடன் பேசத்தொடங்கியுள்ளார். அவர் “ஐயா, தாங்கள் போதுமான அளவு செல்வம் சேர்த்து விட்டீர்கள். உங்களுக்கு எந்த வித கவலையோ, தொல்லையோ இருக்க முடியாது. இவ்வளவு முதுமையிலும் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே.. இது தேவைதானா? ஓய்வு எடுத்துக்கொண்டு அமைதியாக காலத்தைக் கழிக்கலாமே” என்றார். சிலரிடம் தான், கேள்வி கேட்பவர்களைப் பாராட்டும் நல்ல குணமிருக்கும் போலும். அதிலும் இந்த அமெரிக்க கோடீஸ்வரர் வந்துவிட்டார். “நல்ல கேள்வி” என்று பதிலுரைத்தவர், ஏன் என்று விவரமாக கீழ்கண்டவாறு விளக்கினார். “தம்பி... நாம் பயணிக்கும் இந்த விமானத்தை தான் வான் உச்சிக்கு கொண்டு வந்துவிட்டார்களே! இனி மேல் அதன் இயந்திரத்தை நிறுத்திவிட்டால் என்ன?” என்று பதில் கேள்வி கேட்டு தத்துவ வியாக்கியானத்திற்கு தயார் படுத்திக்கொண்டிருக்கையில் “ அதெப்படி முடியும்? அப்படி செய்தால் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து எல்லோரும் இறந்து போவார்களே!” என்றார் சக பயணி. அப்போது தன்னுடைய தத்துவத்தை தர்க்கப்படுத்துகிறார் பெட்ரோல் துறையில் புரட்சி செய்து தொழிலதிபராகி பின்னர் பொதுச்சேவகரான அந்த பணக்காரர் இப்படி, “தம்பி விபத்து என்றதும் எவ்வளவு பயப்படுகிறாய். நமது வாழ்க்கையும் ஒரு விமானப் பயணம் போன்றதுதான். நாம் எப்போது உழைப்பதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது நமது உடலும் மனமும் சீர்கெட்டு விடும். நமது மனதை விட்டு மகிழ்ச்சி பறந்து விடும். நமது உடலை விட்டு ஆரோக்கியம் ஓடிவிடும். எந்த நிமிடமும் நாம் மரணம் என்ற விபத்திற்கு ஆளாகலாம்” எ.ன்று முடித்தவர் Standard Oil கம்பெனியின் நிறுவனரான ஜான்.டி.ராக்பெல்லர்


About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment