ஆசிரியர் குரல்: நீங்களே சரியில்லையெனில் சமுதாயத்தை குறை கூறாதீர்!



இந்த சமுதாயத்தை, தேசத்தை ஒரு சராசரி மனிதன் எவ்வாரெல்லாம் குறை கூற முடியும்? நேற்றைய எனது இரவு நேர பேருந்து பயண்த்தில் இருந்து சில தருணங்களை இங்கே பகிர்கிறேன்.

இரவு ஒரு மணி! அந்த அர்த்த ஜாமத்தில், இரண்டு ஜீப்களில் ரோந்து பணி வெகு ஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பயணத்திற்கு போதுமான பணம் இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக, எதற்கும் இன்னும் கொஞ்சம் இருக்கட்டுமே என்று ATM இயந்திரத்தை நோக்கி நடந்தேன். ஆனால் அந்த இயந்திரத்தின் வெளிப்புர இரும்பு கதவுகளோ பாதி மூடிய நிலையில் இருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். 

தன்னந்தனியாக ஏதோ சிந்தனையில், பேருந்தை வெறுமனே பார்த்து மட்டுமே நின்றிருந்த என்னை ஒட்டுனர் நின்று ஏற்றிக்கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து அதன் கடைசி நிறுத்தத்தை அடைந்ததும், அடுத்த வண்டியில் ஏற முற்பட்டபோது, என் அடுத்த ஓட்டுனர் சக்கரங்களில் காற்றழுத்தம் சரியான நிலையில் இருக்கிறதா என்று சரி பார்த்துகொண்டிருந்தார். 

நான் அதில் ஏறி அமர்ந்தவுடன், 25 முதல் 30 வயது மதிக்கத்தற்க இளைஞன் ஒருவன் முகத்திலும் கைகளிளும் ரத்த காயங்களுடனும், கால்சாரைப்பையில் மது பாட்டிலுடனும் ஏற முற்பட்டான். சக பயணிகள் என்ன, ஏது என்று விசாரித்ததில், சொந்த தாய்மாமன் அடித்ததினால் ஏற்பட்ட காயங்கள் என அழுகிர நிலையில் கூறிய அவனை, முகத்தில் உள்ள ரத்ததை கழுவிக்கொண்டு வந்தால்தான் நடத்துனர் எற்ற துணிவார் என்று விளக்கியவுடன், எங்கோ சென்றுவிட்டு அதே நிலையில் வந்தமர்ந்தான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த காவல் அதிகாரியை அழைத்துவரும்போது மணி இரண்டு. அவன் இருந்த நிலையை கருத்தில் கொண்டு மிகவும் நிதானமாக, தெளிவாக அந்த காவல் ஆணையர் விசாரிக்க தொடங்கியது வரை நான் ஆன்டிராய்டு கருவியில் புதிர் போட்டி விளையாட்டை தொடர்ந்துகொண்டிருந்தேன் என்பதை இங்கே ஒப்புக்கொள்கிறேன். அந்த பேருந்து நிலையமே அவர் விசாரிப்பதை கவனித்துக்கொண்டிருக்கும்போது, இங்கே குறிப்பிட தகுதி இல்லாத இன்னொரு புகார் வந்தடைந்தது. எங்கள் பேருந்து அப்போது கிளம்பியாயிற்று. 

இப்பொழுது வாகன ஓட்டுனரிடம் வருவோம். வண்டி கிளம்பும் முன்னரே உறங்கும் பயணிகளுக்கு தொல்லையில்லாவண்ணம், பாடல் ஒலியை குறைத்து வைத்துக்கொண்டு தொடர்ந்தார். பயணச்சீட்டு கொடுத்துவிட்டு நடத்துனர் சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு அவரும் தூக்கத்திற்கு சென்றார். 

என்னதான் பழக்கம், வேலை என்றெல்லாம் இருந்தாலும், வண்டியில் உள்ள பயணிகள் அனைவரின் பாதுகாப்பும் அவர் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவராய், வேகமாக சென்றாலும் நிதானமாக, கவனமாக தன் பணியை பேச்சுதுணையில்லாமல் தொடர்ந்தபோது அவரது பொருப்பின் சிரமங்களை உணர்ந்தேன்.

என்னதான் நாம் நமது சொகுசு வாகனங்களை அவ்வாறு ஓட்டியிருந்தாலும், பொதுவாக எல்லோரும் பேருந்து ஓட்டுனர்கள் மீது பெரிதாக மரியாதை வைப்பதில்லை. நமது நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வது, வேகத்தடைகளை கண்ணில் மட்டுமே பார்த்துவிட்டு வண்டிக்குள் ஒரு பூகம்பத்தை உண்டாகுவது என்று அவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் எண்ண்ங்கள் முற்றிலும் சரியானதா என்ன? 

முன்பே கூறியது போன்று, அந்த பயணம் தொடங்கியபோது 2 மணி 5 நிமிடங்கள் இருக்கலாம். ஒரு நாள் என்பது அவர்களுக்கு அப்போதே தொடங்கிவிடுகிறது. என்னதான் பழக்கப்பட்டிருந்தாலும், அவ்ர்களுக்கு அயராத வேலையினால் முதுகு தொந்தரவுகள் இருக்கலாம், உட்கார்ந்துகொண்டே இருப்பதால், கால் மூட்டுகளில் ரத்த ஓட்டம் சற்று மந்தமாகி இருக்கலாம். இருந்தாலும் அனைத்து ஓட்டுனர்களும் நம்மை கோபத்திற்குல்லாக்குவதில்லை. நிற்காமல் போனால் போக்குவரத்து ஊழியர்களை திட்டும் நாம், நிறுத்ததை தாண்டியபின் ஓடி வந்து ஏறுபவர்களை ஏற்றிக்கொள்ளும்போது அவர்களிடம் நன்றி தெரிவிக்கிறோமா? இல்லை. 

பேருந்து நிறுத்தத்தில் நிற்க வேண்டும் என்கிறது போல, நிறுத்தத்தை தாண்டி நிற்காமல் போவதிற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை நாம் சற்று ஒப்புக்கொள்ளவேண்டும். 

அந்த அர்த்த ராத்திரியிலும் சிறப்பான ரோந்து பணி, இரவு தனியே நிறுத்தத்தில் நிற்பவனை தானாக ஏற்றி செல்வது, பொது மக்களின் நிலையை புரிந்து பணியாற்றும் காவல் ஆணையர், சிறப்பான பாதுகாப்பான, தொந்தரவில்லா இரவு நேர பயணம் -  இருந்தும் பொது மக்களாகிய நாம் ஒருவர், இருவர் புரியும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த பொதுப்பணியாளர்களையும் சேர்த்து அல்லவா சாடுகிறோம்!

அந்த ATM இயந்திரம் வேலை செய்யாமல் போனதற்காக அவர்களை குறை கூறுவதா? இல்லை, இத்தனை பேரின் பணியை கருத்தில் கொண்டு நம் நாட்டின் மக்கள் சேவையை ரொம்பவே தரம் தாழ்த்தி பழிக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வதா? 

இப்பொது நம் செயலுக்கு வருவோம் - ஒரு மாவட்டத்தின் பிரதான பேருந்து நிலையத்தை சென்றடைந்தேன். அது உண்மையிலேயே அந்த இடம்தானா? இல்லை மாநகராட்சி குப்பைக்கூடமா? என்று சந்தேகத்திற்குள்ளாகும் அளவிற்கு அத்தனை குப்பைகள். 

அதனை சற்று கவனித்ததில் பெரும்பாலும் அங்கே விற்கப்படும் சோளக்கருதுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், செய்த்தித்தாள்கள், ஏறத்தால இரண்டு கிலோ அழுகிய சாத்துக்குடிகள், ஏன் ஒரு மது பாட்டில் உட்பட (இவை அனைத்தும் ஒரு 100 மீட்டருக்குள்) அந்த இடம் ரொம்பவே 'சுத்தமாக' இருந்தது! 

சாப்பிட்டு முடித்த பிஸ்கட் கவரை குப்பைத்தொட்டியில் போடலாம் என பைக்குள் வைத்திருந்த எனக்கோ எரிச்சலை கட்டுப்படுத்தமுடியவில்லை. 

இவ்வளவு குப்பைகள் இங்கே உள்ளனவே, ஒரு வேலை இங்கே குப்பை தொட்டிகளே இல்லையா என்று சற்று பின்னாடி தலையை திருப்பினேன். ஒவ்வொரு தூணின் பக்கத்திலும் ஒரு குப்பைத்தொட்டி இருந்தது! அதில் தெளிவாக "குப்பைகளை குப்பை தொட்டியில் போடவும்" என்றும், தாய்மொழியை படிக்க தெரியாத தருதலைகளுக்காக, ஆங்கிலத்தில் "USE ME" என்றும் நன்றாகவே எழுதியிருந்தார்கள் அதை வைத்த நகைக்கடைக்காரர்கள். 

ஏற்கனவே இங்கே குப்பையாக தானே உள்ளது என குப்பை போடுபவர்கள் முதன்முதலில் அசுத்தம் செய்தவன் தான் பாவம் செய்தவன் என்கிறமேனிற்கு சப்பக்கட்டு கட்டுவீர்கள். பின்பு இதையே காரணம் காட்டி, வெளிநாட்டிற்கு படிக்க செல்கிறீர்கள், அங்கேயே இருந்தும் விடுகிறீர்கள்.

அந்த முதல் குப்பையை மட்டும் நிறுத்த சொல், நாங்கள் நிறுத்துகிறோம், என்று வாய்கிழிய பேச மட்டும் செய்வீர்கள். ஆனால் சில்லறையில்லாத காரணத்தால் கடைகளில் கொடுத்த மிட்டாயை அங்கேயே சுவைக்க வேண்டி, அந்த முதல் குப்பையை நீங்களோ உங்கள் நண்பரோ தான் போட்டிருக்கவேண்டும் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?

"உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்; உலகம் தானாக சரி ஆகிவிடும்".

உங்களுள் ஒரு குரலாக, இதை உங்களுக்கு உணர்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, 
இந்த 
"புதிய குரல்கள்"                                                                            
மீண்டும் ஒலிக்கும்...



About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment