ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை - வெற்றி பெறுமா சேரனின் C2H முயற்சி


திருட்டு DVD-களை ஒழிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள C2H - (Cinema to Home) எனும் புதிய பரிமாணத்தின் முதல் வெளியீடாக விற்பனைக்கு வந்திருக்கும் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தைப்பற்றிய விமர்சனத்திற்கு முன்னர், இந்த C2H என்றால் என்ன என்பதையும் அதனின் நன்மைகளையும் பார்ப்போம்.

C2H - Cinema to Home

திருட்டு  DVD-க்களுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என நமது திரை உலகினர் எத்தனை முறை குரல் கொடுத்தாலும், அதை பொருட்படுத்தாமல், திரையரங்குகளில் படம் பார்க்கும் செலவை மிச்சம் பிடிக்க, மீண்டும் மீண்டும் அதை வாங்குவது நம்மில் பல பேருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இது இப்படி இருக்க, நாளை வெளியாகப்போகும் படத்தினை இன்று இரவே பதிவிறக்கம் செய்து விடுகின்றனர் சிலர். இதனை தடுக்கவே C2H. புதிய படங்களை திரையரங்கங்களுக்கு அனுப்பாமல் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யும் முயற்சி. தெளிவாக சொன்னால் - ஒரிஜினல் DVD. அதன் மூலமாக மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும்!

நன்மைகள்

இதனால் யாருக்கு நன்மை? அனைவருக்கும் தான்

எப்படி? 

தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களை தேடி ஓட தேவையில்லை

மக்கள் தங்கள் வீடுகளிலேயே, தொலைக்காட்சிப் பெட்டியிலோ, இளைஞர்கள் தங்கள் மடிக்கணினியிலோ , வெறும் 50 ருபாய் செலவில் படம் பார்க்கலாம். 

ஆம். ஒரு CDயின் விலை 50 ருபாய். படத்தின் முதல் நாள் அன்று திரையரங்கங்களில் ஒருவருக்கு செலவு செய்யும் பணத்தில் பாதி இதற்கு செலவிட்டால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் படம் பார்க்க முடியும். 

என்ன தான் நல்ல படங்களாக இருந்தாலும், நமக்கு பிடித்த நடிகர் (அ) பெரிய நடிகர், பெரிய டைரக்டர் என்று வருகையில் சிறிய பட்ஜெட் படங்களை பெரும்பாலானவர்கள், ஏன் அனைவருமே புறக்கணிப்பதுண்டு.

அப்போது தரமான படங்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த C2H மூலம் இரண்டு தரப்பிற்கும் லாபமே.

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை 

விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேகத்தோடு ஓடும் ஒரு இளைஞன். அவனது வாழ்க்கை. அடுத்தடுத்த தொழில்களில் அவன் அடையும் வெற்றி, உடனே மேலும் பணம் சேர்க்க அடுத்த திட்டம் என எப்போதும் வேலை, வேலை என வெறியோடு உழைக்கிறான்.

ஏன் அப்படி? எல்லோருக்கும் இருக்கும் ஆசை தான் என்றாலும், பெற்றோர்களுடன் கூட நேரம் செலவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனை ஓட வைப்பது எது?

இவற்றையெல்லாம் சேரனுக்கே உரித்தான பாணியில் திறம்பட படமாக்கி இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டில் பெற்றோர்களை மதிக்காமல் மாதச்சம்பலத்திற்கு வேலை செய்யும் நாயகன், இரண்டே ஆண்டுகளில் ஒரு பெரிய நிறுவனத்தை, சிறப்பாக நிறுவி, திறம்பட செயலாற்றுகிறான்.

இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவையான தன்னம்பிக்கையை, வெற்றி பெற அது மட்டுமே போதாது, நமது விருப்பங்களை சற்று தளர்த்தி, அடுத்த நாளைப்பற்றிய தெளிவான திட்டமிடுதலும் அதனை செய்து' முடிக்கும் ஆற்றலும் தான் வெற்றியை தரும் என்பதை எடுத்துக்காட்டும் படம்.

இரண்டாம் பாதியில், அவனின் ஓட்டத்திற்கான காரணமும், கதையின் முடிவும் நம் கண்முன் விரிகிறது. வழக்கமாக ஒரு சேரன் படத்தை பார்த்தால், அதனின் தாக்கம் ஒரு சிறிய வடிவிலாவது நம்முடன் ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை'யும்.

சர்வா (எங்கேயும் எப்போதும்), நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ் என முன்னணி நடிகர்ளை வைத்து எடுக்கப்படிருக்கும் இந்த படம் கடந்த மார்ச் 5 ஆம் தேதியில் இருந்து விற்பனையில் இருக்கிறது.

பாடல்களுக்கான இசை - ஜி.வி.பிரகாஷ் குமார் 
பின்னணி இசை - சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு - சித்தார்த்
படத்தொகுப்பு - G.ராமராவ்
கலை - ராஜீவன், V. செல்வ குமார்

10 லட்சம் CD-க்கள் விற்றுவிட்டதாக தகவல்! உங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும். வாங்கிப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். ஒரு நல்ல முயற்சியை பாராட்ட தவறாதீர்கள்.

படத்தின் டிரைலர்




About Unknown

Puthiyakuralgal we are passionate about doing new things to cover every aspects.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment